அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
என்னை கைது செய்தால்
பதற்றம் அதிகரிக்கும்: கமல்

சென்னை: ''நான் கைதுக்கு பயப்படவில்லை. என்னை கைது செய்தால், இன்னும் பதற்றம் அதிகரிக்கும்; அதை செய்யாமல் இருப்பது நல்லது,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார்.

கைது,பதற்றம்,கமல்சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:காந்தி குறித்து நான் கூறியதில், தவறான கருத்து ஒன்றும் கிடையாது. பல ஆண்டுகளாக சொல்லப்பட்டது தான். இதே கருத்தை, லோக்சபா தேர்தலின் கடைசி நாள் பிரசாரத்தில் கூறி உள்ளேன். அப்போது, தன்னம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு, தற்போது நம்பிக்கை குறைந்துள்ளது. அதனால், எது கிடைக்கிறதோ, அதை பிடித்துக் கொண்டு, தேவையற்ற பிரச்னையை உருவாக்கி விட்டனர்.பிரதமர் மோடி கருத்துக்கு, நான் பதில் கூற வேண்டியதில்லை. பிரதமருக்கு சரித்திரம் பதில் கூறும்; சரித்திர ஆசிரியர்களும் இருக்கின்றனர். நாங்கள் தீவிர அரசியலுக்கு வந்து விட்டோம். நான் கைதுக்கு பயப்படவில்லை. கைது செய்தால், இன்னும் பதற்றம் அதிகரிக்கும். இது, என் வேண்டுகோள் இல்லை; அறிவுரை. அதை செய்யாமல் இருப்பது நல்லது.


திரையுலக நண்பர்களுக்கு, வேறு கருத்து இருக்கலாம்; அதனால், என் கருத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இது, ஜனநாயக நாடு. தற்போது, காந்தி குறித்து நல்ல கருத்துக்கள் வருகின்றன. சரித்திரத்தை மீண்டும் நினைவு கூர்வது நல்லது.சூலுாரில், நான் கடைசி நாள் பிரசாரம் செய்வதை, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தடை செய்துள்ளனர். பதற்றம் நிலவினால், தேர்தலை ஏன் ஒத்தி வைக்கக்கூடாது என்பது தான், எங்கள் கேள்வி.


அமைச்சரின் பேச்சு, அவருடைய குணா திசயத்தை காட்டுகிறது. அனைத்து மதங்களி லும் பயங்கரவாதிகள் உள்ளனர். வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு காலகட்டத்தில், எனக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றன. அவை சரியான போராட்டங்கள் இல்லை என்பது, மக்களுக்கு புரிந்துள்ளது.

இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ்., யார் என்பதை,

பிரித்து பார்க்க வேண்டும்; மொத்தமாக கூறக் கூடாது. அரசியல் ஆட்கள் எப்போது வேண்டு மானா லும் புண்படுவர். அரசியல் இல்லாத, மதம் சார்ந்த நபர்கள், சிறிது நேரம் யோசிப்பர். புண்படுவது என்பது தனிப்பட்ட அரசியல் சாதனங்கள்; வன் முறை சாதனங்கள். எனக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை.காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு, அழைப்பு வரவில்லை.இவ்வாறு, கமல் கூறினார்.

'இது, அக்னிபரீட்சை'

கமல் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'மக்கள் நீதி மைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டு கோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னீப்பரீட்சை. ஆர்ப் பாட்டக் கூட்டம், நம்மை வன்முறைக்கு இழுக்கப்பார்க்கும். மயங்காதீர்; அவர்களின் தீவிரவாதம், நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும்; நாளை நமதே' என, குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு டுவிட்டர் பதிவில், 'மத்திய, மாநில அரசுகள், சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன.மக்கள் எடுத்து விட்ட முடிவை, தாமதப்படுத்த லாமே தவிர, தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, நாயன்மார்களாலோ, 'ஹிந்து' என்ற மதகுறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால், 'ஹிந்து' என, நாமகரணம் செய்யப்பட்டோம்.ஆண்டு அனுபவித்து சென்ற, ஆங்கிலேயர் அந்த அடை மொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, 'மாற்றான் கொடுத்த பட்டயத்தை, நாம், பெயராக, மதமாக கொள்வது, எத்தகைய அறியாமை.


'நாம் இந்தியர்' என்ற அடையாளம், சமீபத்தியது தான்; எனினும், காலம் கடந்து வாழக்கூடியது. புரியலன்ற சோமாரிகளுக்கு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்று எத்தனை முறை, தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். 'கோடி' என்ற உடனே, 'பணம்' ஞாபகம் வந்தால், நீ தலைவன் அல்ல; அரசியல்வாதி அல்ல; வெறும் வியாதி. தமிழா நீ தலைவனாக வேண்டும்; இதுவே, என் வேண்டுகோள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தேர்தல் அலுவலர் விசாரணை


அரவக்குறிச்சியில், தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது: கமல் பேசியது தொடர்பாக, அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசியல் கட்சியினர், மனு கொடுத்து உள்ளனர்.


இவ்விவகாரம்குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரித்து வருகிறார். அதேபோல, அமைச்சர்,

Advertisement

ராஜேந்திர பாலாஜி பேசியது தொடர்பாக வும், புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும், விசாரணை நடந்து வருகிறது. இருவருடைய பேச்சு குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களிடம், அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

'தூக்கி எறியுங்கள்'

கமல் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:இது இன்னொரு, 'டிவி'யை உடைக்கும் வீடியோ அல்ல; நன்றி சொல்ல வந்த வீடியோ. ஒட்டப்பி டாரம் சென்ற போது, காளியப்பன் என்பவரின் வீட்டுக்கு சென்றேன்; அவர் வீட்டில் இல்லை. கடந்த, 2018 மே, 22ல் நடந்த துப்பாக்கி சூட்டில், அவர் இறந்து விட்டார். சம்பள பணத்தை வாங்க சென்றவர், துப்பாக்கியால் சுடப்பட்டார்.அவரை இழந்த குடும்பத்தாருக்கு, நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி, அதே தொகுதிக்கு சென்று, பிச்சை கேட்டு, வெட்கமில்லாமல் திரிகின்றனர். வரும் இடைத்தேர்தலில், சுயநல அரசியல்வாதிகளை துாக்கி எறியுங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கருத்து கூற முதல்வர் மறுப்பு


''கமல் பேச்சு குறித்து, ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என, நீதிமன்றம் கூறியுள்ளதால், நான் கருத்து கூற இயலாது,'' என,முதல்வர், இ.பி.எஸ்., கூறினார். மதுரை, சிவகங்கையில், அ.தி.மு.க., நிர்வாகி கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, சென்னை செல்ல வந்த அவர், மதுரை விமான நிலையத்தில் கூறியதாவது: கமல்பேச்சு குறித்து, ஊடகங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என நீதிமன்றம் கூறியுள்ளதால், நான் கருத்து கூற இயலாது. தமிழகத்தில், பருவ மழை சரியாக பெய்யாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலையில், அரசியல் தலையீடு உள்ளது என்ற, துணைவேந்தர் சுரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் பிரசாரத்தில், மத உணர்வுகளை துாண்டும் விதமாக பேசி னால், தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் விதி முறையை பின்பற்றி, அரசியல் தலைவர்கள் பேசினால், எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு, இ.பி.எஸ்., கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-மே-201903:44:19 IST Report Abuse

 nicolethomsonசரி ஜோக்கர் பீஸ்

Rate this:
jagan - Chennai,இந்தியா
18-மே-201921:55:37 IST Report Abuse

jaganகாலணிகளை இவர் மீது வீசி காலணிகளை கேவல படுத்தாதீர் ...காலணி என்றுமே ஜோடி மாறாது.

Rate this:
Mani -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-201920:13:09 IST Report Abuse

ManiHe achieved what He expect because of this controversy. our politicians doesnt have mind and they too help him. If we were silent, that is his loss.

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X