சின்னமனுார்:லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி எம்.பி., என பொறிக்கப்பட்ட கல்வெட்டு தேனி மாவட்டம் குச்சனுார் அன்னபூரணி கோயிலில் வைக்கப்பட்டது. சமூக வலை தளங்களில் 'வைரல்' ஆனதையடுத்து தற்காலிகமாக மறைக்கப்பட்டது.
குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கோயிலுக்கு அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராமையா 65, அன்னபூரணி கோயில் கட்டியுள்ளார்.சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அன்னபூரணி கோயிலுக்கும் சென்றதால் பிரபலமானது.
இதையடுத்து ராஜகோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் மே 16 ல் நடந்தது. நன்கொடை வழங்கியவர்கள் பெயர் கல்வெட்டில் ரவீந்திரநாத் குமாரை தேனி எம்.பி., என்று குறிப்பிட்டிருந்தனர். துணை
முதல்வரின் மற்றொரு மகன் ஜெயபிரதீப் குமார் பெயரும் இடம் பெற்றிருந்தது.கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்கள் அந்த கல்வெட்டு புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். அது 'வைரல்' ஆனது.
சமூக வலை தளங்களிலும் கண்டனங்கள் குவிந்தன. நேற்று பிரச்னைக்குரிய
கல்வெட்டின் மேல் மற்றொரு கல்வெட்டை வைத்து பூசி மறைத்தனர்.
குச்சனுார் மக்கள் கூறுகையில், 'ராமையா தீவிர அ.தி.மு.க., விசுவாசி. போலீஸ் துறையில் பணிபுரிந்த அவரது மகன் வேல்முருகன் ஜெ., நலன் பெற வேண்டி யூனிபார்முடன் 'மொட்டை' போட்ட பிரச்னையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் கட்டாய பணிஓய்வு அளிக்கப் பட்டது. அவர் பரபரப்பிற்காக ஏதாவது செய்யும் பழக்கமுடைய வர். ஆனால் இந்த கல்வெட்டு வைத்து, மகனையும் ராமையா மிஞ்சி விட்டார்,' என்றனர்.
வேல்முருகன் கூறுகையில், ''துணை முதல்வர் தரப்பில் கேட்டு கொண்டதால் தற்காலிகமாக கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியானவுடன், ரவீந்திரநாத்குமார் எம்.பி.,யாக கலந்து கொள்ளும் முதல் விழாவாக இந்த கல்வெட்டு திறப்பு இருக்கும்,''என்றார்.
அ.ம.மு.க., கொள்கை பரப்பு
செயலாளர் தங்க தமிழ் செல்வன் கூறியதாவது: தேர்தல் முடிவுக்கு முன்பே
எம்.பி., என குறிப்பிட்டது தவறு. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலையிட்டு
அதனை அகற்ற வேண்டும்.தேர்தல் நேரத்தில் மக்களுக்கான
நலத்திட்டங்களை சொல்லி
ஓட்டு கேட்க வேண்டும்.மதவாதம் குறித்து பேசக்கூடாது. கமல் பேசியது தவறானது, என்றார். பேட்டி முடிந்த சில மணி நேரத்தில் அக்கல்வெட்டு மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனக்கு தெரிந்த வரையில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிப்பதற்கு முன் யாரும் இதுபோல எம்.பி., என கல்வெட்டு அடித்தது இல்லை. அவர் தோற்கப்போவது உறுதி. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது ஒரு வேட்பாளர் எம்.பி., என அறிவிப்பது விதிமீறல். எனவே துணை முதல்வர் மகனை கைது செய்ய வேண்டும். மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் ஓட்டுச் சாவடி பகுதிகளில் பிரசாரத்திற்கு முதலில் அனுமதி அளிக்காத தேர்தல் ஆணையம் பிரசாரம் முடிவதற்கு முதல்நாள் அனுமதி அளித்தது. அது பிரதமர் மோடியின் எடுபிடியாக செயல்படுகிறது. இளங்கோவன் காங்., வேட்பாளர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (12)
Reply
Reply
Reply