மதுரை, ''தமிழக முதல்வராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் பதவியேற்பது உறுதி" என அவரது மகனும், நடிகருமான உதயநிதி தெரிவித்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து திருநகரில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடப்பது மோடியின் அடிமையான ஆட்சி. இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஏற்கனவே சவப்பெட்டி தயாராகி விட்டது. அதை மூடி அடிக்க 4 ஆணிகள் தேவை. அந்த நான்கு ஆணிகள் தான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல்கள்.
மறைந்த தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதி, என்றார்.