பொது செய்தி

தமிழ்நாடு

16ம் நூற்றாண்டு வீரக்கல்: வேலூரில் ஒப்படைப்பு

Added : மே 18, 2019
Advertisement

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, சென்னியமங்கலம் கிராமத்தில், 2016ம் ஆண்டு, 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர பேரரசு காலத்தை சேர்ந்த வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது. போரில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் இந்த நடுக்கல், போளூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இதையறிந்த, கலெக்டர் கந்தசாமி, இந்த நடுக்கல்லை வேலூர் கோட்டையில் உள்ள, அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை, இந்த நடுக்கல் வேலூர் எடுத்து வரப்பட்டு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து காப்பாட்சியர் சரவணன் கூறியதாவது: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இது வரை, 19 வீரக்கல் கண்டறிந்து கொண்டு வரப்பட்டு, வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X