பொது செய்தி

தமிழ்நாடு

செம்மரக் கட்டை ஏஜென்ட்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனக்குழு

Added : மே 18, 2019
Advertisement

பேர்ணாம்பட்டு: செம்மரக் கட்டை ஏஜென்ட்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், வனக்குழுவினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம், திருப்பதி, கடப்பா வனப்பகுதியில் லட்சக்கணக்கான செம்மரங்கள் உள்ளன. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களை, புரோக்கர்கள் அழைத்துச்சென்று, செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்துகின்றனர். அப்போது, ஆந்திரா வனத்துறையினரிடம் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்று, கடந்த ஓராண்டாக சித்தூர், கடப்பா சிறைகளில், 3,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர். ஆசை வார்த்தை கூறி, தொழிலாளர்களை செம்மரக் கட்டை ஏஜென்ட்டுக்கள் தான் அழைத்துச் செல்கின்றனர். இதனால் எஜென்ட்டுக்களை கைது செய்தால், மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையும் என ஆந்திரா, தமிழக வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழக - ஆந்திரா மாநில வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களைத் தான், ஆந்திராவுக்கு செம்மரக் கட்டை வெட்ட, ஏஜென்ட்டுக்கள் அழைத்துச் செல்கின்றனர். இதை தடுக்க, வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், புதூர் நாடு, ஆணைக்கட்டு, அமிர்த்தி உட்பட, 13 இடங்களில், வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில், 10 பேர் உள்ளனர். இவர்கள் வனப்பகுதிகளையொட்டி உள்ள மலைக் கிராமங்களை கண்காணிப்பர். அங்குள்ள தொழிலாளர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படும். தொழிலாளர்கள் எண்ணிக்கை திடீரென குறைந்தால், அவர்கள் செம்மரக் கட்டை வெட்ட சென்றுள்ளார்கள் என்பது உறுதியாகும். கிராமங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம், செம்மரக் கட்டை ஏஜென்ட்டுக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இது குறித்து வனக்குழுக்களை சேர்ந்தவர்கள் வாரந்தோறும் தலைமை வனத்துறை அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X