சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி லாரியில் மணல் கடத்தல்: பெண்கள் உட்பட 5 பேர் கைது

Added : மே 18, 2019
Advertisement

செய்யாறு: செய்யாற்று படுகையில் இரவு பகலாக லாரி, மினி வேன் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களால், பொக்லைன் மூலம், மணல் திருட்டு நடக்கிறது. செய்யாறு போலீசார், காஞ்சிபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மணல் கடத்தி வந்த மினி லாரியை மடக்கி நிறுத்த முன்றனர். போலீசாரை கண்டதும், மினி லாரி வேறு வழியில் தப்பி செல்ல முயன்றது. போலீசார் விரட்டி சென்றனர். அப்போது, வெங்கடேஸ்வரா நகர் பகுதியில், ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது, லாரி மோதி நின்றது. மினி லாரியில் இருந்த கும்பல் தப்பி சென்றனர். போலீசார் விசாரித்து, தப்பிச்சென்ற கொடநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல், 40, இவரது மனைவி சத்யா, 38, பெருமாள், 42, மற்றும் இவரது மனைவி ராதா, 39, மற்றும் பாலாஜி, 35, ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X