சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

Added : மே 18, 2019
Advertisement

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, குடிநீர் கேட்டு, பெண்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.
பவானிசாகர் யூனியன், வரப்பாளையம் பஞ்., கொண்டையம்பாளையம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து, கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு வாரமாக, குடிநீர் வினியோகிக்கவில்லை. இதனால் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். ஆவேசமடைந்த, 60 பெண்கள் உட்பட, 80க்கும் மேற்பட்டோர், குடிநீர் முறையாக வழங்ககோரி, காவிலிபாளையம்-நம்பியூர் சாலையில், காலிக்குடங்களுடன் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புன்செய்புளியம்பட்டி போலீசார், சமாதானம் செய்தும் கலையவில்லை. இதையடுத்து, பவானிசாகர் பி.டி.ஓ.,மைதிலி, பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் வாக்குவாதம் செய்தனர். ''கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால், குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல், குடிநீர் சீராக வினியோகிக்கப்படும்,''என்றார். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X