பொது செய்தி

தமிழ்நாடு

கை செலவுக்கு கைகொடுக்கும் கோழிக்கொண்டை: சாகுபடி செய்ய சிறு விவசாயிகள் ஆர்வம்

Added : மே 18, 2019
Advertisement

கோபி: கைச்செலவுக்கு கை கொடுப்பதால், கோபி பகுதி விவசாயிகள், கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
கோபியில், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, பாசனத்தில், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த மாதம், 31ம் தேதியுடன், தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், இரு பாசனங்களிலும் உள்ள சில விவசாயிகள், கைச் செலவுக்காக, குறுகியகால மாற்றுப்பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர். கிணற்று பாசனத்தில் வாழைக்குள் ஊடுபயிராக சின்னவெங்காயம், செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர், கோழிக் கொண்டை பூ சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து கோபி, கோட்டுப்புள்ளாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நாற்று விட்ட நாளில் இருந்து, 60 நாட்களில், பூக்கள் விற்பனைக்கு தயாராகும். பூக்கும் தருணத்தில் இருந்து, மீண்டும் 30 முதல், 40 நாட்களுக்கு, பூக்கள் கிடைக்கும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் விட வேண்டும். 100 கிராம் விதையை கொண்டு, ஒரு ஏக்கருக்கு, நாற்றாக நடவு செய்தால், ஒரு டன் பூக்கள் சாகுபடியாகும். சத்தியமங்கலம், பூ மார்க்கெட்டுக்கு, விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். தற்போது, ஒரு கிலோ, 100 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. கைச்செலவுக்கேற்ப, பூக்களை பறித்து, விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத காலங்களில், கோழிக்கொண்டை சாகுபடி, கைச்செலவுக்கு கை கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X