பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : மே 18, 2019
Advertisement

பாலச் சுவருக்கு தேவை கவனிப்பு: ஈரோடு-பவானி பிரதான சாலையில், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாலத்தில், வலது பக்கவாட்டு கைப்பிடி தடுப்புச்சுவரின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது. இதனால் துருபிடித்த கம்பியின் பிடிமானத்தில், பலவீனமாக உள்ளது. பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. எனவே, உடைந்து விழும் நிலையில், ஆபத்தான முறையில் உள்ள சிதைந்த பகுதிகளை சீரமைத்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
அடையாளமில்லா தடையால் விபத்து: கோபி ஜே.ஜே.நகர் ஆர்ச் வழியாக, பச்சமலை சாலையை அடையும் குறுக்கு வழிச்சாலை உள்ளது. இங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடையாளம் காட்ட, பெயின்ட் அடிக்கவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது அறியாமல், பலர் அருகில் வந்த பிறகே பார்த்து, உணர்வதற்குள், விபத்தை சந்தித்து விடுகின்றனர். நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறையினர், அடையாளம் காட்ட முயற்சிக்கலாமே?

குப்பை தொட்டி வைக்கலாமே? கோபி, கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், மரங்கள் சூழ்ந்த மணல் பரப்பு உள்ளது. சுற்றுலா பயணிகள், மரத்தடியில் அமர்ந்து, உணவு பண்டங்களை சாப்பிடுகின்றனர். பிளாஸ்டிக் தடையால், பலர் பாக்கு மட்டை தட்டு பயன்படுத்து கின்றனர். குட்டீஸ்கள் ஐஸ்கிரீம் சுவைக்கின்றனர். குப்பைத் தொட்டி இல்லாததால், அப்படியே வீசி செல்கின்றனர். குப்பை தொட்டி வைத்தால், சுகாதார சீர்கேடு தவிர்க்கலாமே?

சந்தையில் சாய்ந்த மரத்தால் இடையூறு: சிவகிரி பேரூராட்சியில், ஐந்து ஏக்கர் பரப்பில் சந்தை வளாகம் உள்ளது. பலத்த காற்றால், வளாகத்தில் இருந்த, வாதநாராயண மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்களுக்கும் சிரமமாக உள்ளது. மரத்தை ஏலத்தில் விட்டால், பேரூராட்சிக்கு வருமானம் கிடைக்கும். இதனால் மரமும் அகற்றப்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க, அதிகாரிகளுக்கு ஏன் தயக்கம்?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X