பொது செய்தி

தமிழ்நாடு

காலை 5:00 மணிக்குள் வரவேண்டும்: 'கவுன்டிங்' அலுவலர்களுக்கு உத்தரவு

Added : மே 18, 2019
Advertisement

ஈரோடு: ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாலை, 5:00 மணிக்குள் வர உத்தரவிடப்பட்டது.
ஈரோடு, லோக்சபா தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு, ஈரோட்டில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. டி.ஆர்.ஓ., கவிதா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓட்டு எண்ணும் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என, 390 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுவோர், தேர்தல் ஆணைய அடையாள அட்டையுடன், 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை மையமான, சித்தோடு ஐ.ஆர்.டி., பொறியியல் கல்லூரிக்கு வரவேண்டும். அங்கு, ஓட்டு எண்ணும் தொகுதி விபரம், குலுக்கல் முறையில் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை தினமான, 23ல் காலை, 5:00 மணிக்குள், ஐ.ஆர்.டி., நுழைவு வாயிலுக்கு அனைவரும், வர வேண்டும்.


ஒவ்வொரு டேபிளிலும் ஓட்டு எண்ணிக்கையின்போது, ஓட்டு எண்ணும் அலுவலர் காண்பிக்கும் எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கை அலுவலர், முகவர், நுண் பார்வையாளர் ஆகியோர் குறித்து, ஒட்டு மொத்தமாக சரியாக உள்ளதா என்பதை தெரிவித்த பிறகு, அடுத்த ஓட்டுப்பதிவு இயந்திரம் எண்ணப்பட வேண்டும். ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில், மொபைல்போன், வாகனத்துக்கு அனுமதியில்லை. மருந்து, மாத்திரை எடுத்து வரலாம். ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்போர், அதிகாலையில் வருவதால், உடல் பரிசோதனை செய்து கொள்ள, டாக்டர் குழு ஏற்பாடு செய்யப்படும். தபால் ஓட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' எண்ணி முடிக்கப்பட்டபின், இறுதி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X