பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூல் பெற பசுந்தாள் உரங்கள்: வேளாண் அதிகாரி யோசனை

Added : மே 18, 2019
Advertisement

ஈரோடு: ''மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்,'' என, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகமான நவீன தொழில் நுட்பங்களால், எதிர்பார்த்த மகசூலை பெற முடிந்தது. இருப்பினும், தொழில் நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்ட இடுபொருட்களால், குறிப்பாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளால் மண் வளம், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மண் வளமே, மகசூலை நிர்ணயிக்கிறது. அத்தகைய மண் வள மேம்பாட்டில், பசுந்தாள் உரங்கள் முக்கியமாகும். பசுந்தாள் உரப்பயிர்கள், வேர் முடிச்சுகளின் மூலம் காற்றில் உள்ள சத்துக்களை எடுத்து மண்ணில் நிலை நிறுத்தும். தக்கைப்பூண்டு: மிக விரைவில் வளரும் தன்மை கொண்ட தக்கைப்பூண்டு, எளிதில் மக்கும் திறன் கொண்டது. மண்ணில் உள்ள அங்கக பொருட்கள், தழைச்சத்தை அதிகரிக்க உதவும். மேலும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை பெரிதும் குறைக்கும். இவை வறட்சி, நீர் பாங்கான நிலங்களிலும் வளரும். சணப்பை: அதிக வேர் முடிச்சு கொண்ட பசுந்தாள் உரப்பயிரான சணப்பை, மணல் மற்றும் செம்மண் நிலத்தில் நன்கு வேகமாக வளரும். இதன் வேர் முடிச்சுகள், காற்றில் உள்ள சத்துக்களை நிலை நிறுத்தும். சணப்பை பயிரின் முற்றிய செடிகளில் இருந்தும், நார்களை பிரித்து பயன்படுத்தலாம். சீமை அகத்தி: வேர்களில் மட்டுமின்றி, தண்டுகளிலும் முடிச்சுகள் கொண்ட இப்பயிர், சிறந்த பசுந்தாள் உரப்பயிராகும். வரப்புகளின் ஓரங்களில் பயிரிடலாம். நெல் வயல்களில் இதனை மடக்கி உழுவதால், மண்ணின் அங்கக தன்மை, தழைச்சத்துக்களின் அளவை ஊக்குவிக்கிறது. நரிப்பயிறு: கொடி வகையை சேர்ந்த இப்பயிரானது, பசுந்தார் உரமாக மட்டுமின்றி தானிய பயிராகவும், மாட்டு தீவன பயிராகவும் பயன்படுகிறது. களி மண் நிலத்தில் நன்றாக வளரும். இதற்கு அதிக நீர் தேவையில்லை. இவை அடர்த்தியாக வளர்வதால், களைச் செடிகளின் தாக்கத்தில் இருந்து பயிர்களை காக்கலாம். இத்தகைய பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதால், மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கும். இறுக்கமான தன்மை மாறும். அங்கக பொருட்களின் அளவு அதிகரிக்கும். மண் அரிப்பில் இருந்து மண்ணை பாதுகாக்கும். இப்பயிர்கள் மக்கும்போது, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, மற்ற நுண்ணூட்ட சத்துக்களையும் கரைத்து, பயிர்கள் எடுத்து கொள்ள உதவும். சில பசுந்தாள் உரப்பயிர்கள், கால்நடை தீவனமாகவும் பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X