சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டி இடிந்து சிறுவன் பலி: சகோதரிக்கு கால் முறிந்தது

Added : மே 18, 2019
Advertisement

அந்தியூர்: பர்கூர் மலையில், தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், சிறுவன் பலியானார். சகோதரி படுகாயம் அடைந்தார். அந்தியூரை அடுத்த, பர்கூர் மேற்குமலை, கோவில் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பொம்மையன். இவரின் மகன் நாகேந்திரன், 7, மகள் ஹேமாவதி, 9; இருவரும் தோட்டத்தில் உள்ள, தண்ணீர் தொட்டி அருகே, நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து. இதில் நாகேந்திரன், சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். ஹேமாவதிக்கு கால் முறிந்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X