பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : மே 18, 2019
Advertisement

குடிநீர் தொட்டி தரை சேதம்: சோகத்தூரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததையடுத்து, இதில் தண்ணீர் வருவதில்லை. மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். தொட்டியின் தரைதளம் சேதமாகி உள்ளது. இதனால், குழாய் அடியில் குடம் வைக்க முடியாத நிலையுள்ளது.
சாக்கடை இல்லை; இதனால் தொல்லை: கடகத்தூரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதன் ஒருபகுதியில், அரசு பள்ளி உள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில், சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இங்கு அதிகளவில் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன்கருதி, கடகத்தூரில், சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

காட்சி பொருளான சேவை மையம்: தர்மபுரி அடுத்த வெள்ளோலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், சேவை மையம் கட்டப்பட்டது. 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதில், பட்டா, சிட்டா வழங்குதல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் திருத்தம், வருமான, ஜாதி, இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை, பொதுமக்கள் எளிதில் பெற கட்டப்பட்டது. இது திறக்கப்படாமல் உள்ளதால், இவ்வாறான சான்றிதழ்களை பெற, இப்பகுதி மக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் சென்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X