பாலிடெக்னிக்கில் சேர 334 பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக்கில் சேர 334 பேர் விண்ணப்பம்

Added : மே 18, 2019

பாலக்கோடு: பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர, 334 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செண்பகராஜா கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என, ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. இதில், 360 சீட்டுகள் உள்ளன. இதில் சேர, விண்ணப்பிக்க கடைசி நாளான, 17 வரை, 334 பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். மதிப்பெண் தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி, முதல் கட்ட கலந்தாய்வு வரும், 29 மற்றும், 30ல் கல்லூரியில் நடக்கும். விபரங்களுக்கு, 04348 222102 எண்ணில், கல்லூரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X