சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பள்ளி ஆசிரியர் கைது

Added : மே 18, 2019
Advertisement

பென்னாகரம்: பென்னாகரம் அருகே காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்த, தனியார் பள்ளி ஆசிரியரை, போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் திருமாறன், 28. இவர், பி.எட்., முடித்துவிட்டு, தனியார் பள்ளியில் ஆசிரியாராக பணி புரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் மகள் சோனா, 22, என்பவரை திருமணம் செய்வதாக, ஆசை வார்த்தைக்கூறி, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த, 15ல், நரசிப்புரத்தை சேர்ந்த பாலு மகள் திருமகள் 24, என்பவரை, திருமணம் செய்து கொண்டார். இதையெடுத்து, சோனா, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X