பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை தானியங்கள் தட்டுப்பாடு

Added : மே 18, 2019
Advertisement

அரூர்: அரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட விதை தானியங்கள் தட்டுப்பாட்டால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, பெய்த கோடை மழையால், சோளம், நிலக்கடலை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை மானாவாரியாக, சாகுபடி செய்ய, விவசாயிகள் உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், சோளம், நிலக்கடலை உள்ளிட்டவைகள் கிடைக்காததால், அவதிக்கு ஆளாகி வருவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தற்போது, பெய்த தொடர் கோடை மழையால், நிலக்கடலை மற்றும் கால்நடைகளின் பசுந்தீவன தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், சோளம் விதைப்பு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, நிலங்களை உழவு செய்து, தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில், அரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு, செல்லும் விவசாயிகள் அங்கு, தாங்கள் சாகுபடி செய்ய விரும்பும் நிலக்கடலை, சோளம் உள்ளிட்டவைகள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால், சாகுபடி பணிகள் பாதிக்கப்படுவதுடன், சோளம் உள்ளிட்டவைகளை தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையுள்ளது. எனவே, நிலக்கடலை, சோளம் மற்றும் சிறுதானியங்கள் அரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், தட்டுப்பாடின்றி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X