பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

Added : மே 18, 2019
Advertisement

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு, வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் என, தினமும், 150க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவியரை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்வதை தடுக்கவும், பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சில மாதங்கள் மட்டுமே, பயன்பாட்டில் இருந்த புறக்காவல் நிலையம் அதன் பின், பூட்டியே கிடக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மொபைல்போன் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், இரவு நேரங்களில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X