பொது செய்தி

தமிழ்நாடு

சேதமான அரசு கட்டடத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

Added : மே 18, 2019
Advertisement

நல்லம்பள்ளி: தர்மபுரி அடுத்த, நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட கோவிலூரில், பயன்பாடின்றி உள்ள அரசு கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நலம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட கோவிலூரில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த, 2003 - 04ல், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. இதை, பயன்படுத்தி வந்தனர். கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், சாய்வுதள மேடை அமைக்கப்பட்டது. இந்த கட்டடம், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இதை பயன்படுத்த மக்கள் தயங்கி வந்தனர். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடம் பூட்டப்பட்டது. இதனால், இக்கட்டடம் இன்று வரை காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, பழுதான இந்த கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டடம் அமைத்து, நூலகம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X