சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கழுத்திலிருந்து 5 பவுன் செயின் பறிப்பு

Added : மே 18, 2019
Advertisement

அரூர்: அரூரில், பட்டப்பகலில் வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்து, ஐந்து பவுன் செயினை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் அம்பிகா, 61, இவரது கணவர் மாதையன் இறந்து விட்டார். நேற்று, அம்பிகா கடத்தூர் சென்று விட்டு, பகல், 12:15 மணிக்கு, தனியார் பஸ்சில் அரூருக்கு வந்துள்ளார். பின், திரு.வி.நகர்., பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சுப்ரமணி என்பவரது வீட்டின் அருகே சென்ற போது, எதிரே, பைக்கில் தொப்பி அணிந்து வந்த நபர், அம்பிகாவின் கழுத்திலிருந்த ஐந்து பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின்படி, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X