பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : மே 18, 2019
Advertisement

நீரின்றி தொட்டி; மக்கள் தவிப்பு: சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டா தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. இதில், பஞ்., நிர்வாகம் பல மாதமாக தண்ணீர் நிரப்பாமல் உள்ளது. அதனால், பயன்பாடின்றி காட்சி பொருளாக மட்டுமே தொட்டி உள்ளது. கோடை காலம் என்பதால், மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்ய வேண்டும்.
பாதுகாப்பில்லாத மின்சார பெட்டி: கிருஷ்ணகிரி - செம்படமுத்தூர் சாலை இலுப்பமரத்துக் கொட்டாய் கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில், சின்டெக்ஸ் டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற, மோட்டாரில் இயக்கும் மின்சாரப்பெட்டி வைத்துள்ளனர். இது பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதிலுள்ள மின் மீட்டரை அகற்றிய போது, ஒயரை பாதுகாப்பில்லாமல் விட்டுள்ளனர். மின்சாரப்பெட்டி சிறுவர்களின் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X