பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்

Added : மே 18, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரக பகுதியில், பல்வேறு குழுக்களாக, 21 யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், 12க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும், நேற்று முன்தினம் காலை, ஒன்னல்வாடி, ஜொனபெண்டா இடையே உள்ள ஏரி அருகே முகாமிட்டன. இவற்றை வனத்துறையினர் விரட்டியும், அங்கிருந்து செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு, யானைகளை விரட்டிய போது, அருகில் உள்ள எம்.அக்ரஹாரம் கிராமத்துக்கு சென்றன. அங்கு நாராயண ரெட்டி என்பவரது காலிபிளவர் தோட்டம் மற்றும், 30க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் கூட்டம் நாசம் செய்தன. அங்கிருந்து வனத்துறையினர் விரட்டியதால், நேற்று அதிகாலை நேரத்தில் சானமாவு வனப்பகுதிக்கு யானைகள் திரும்பின. நேற்று காலை வனப்பகுதியிலிருந்து மீண்டும் வெளியேறிய யானைகள், தொரப்பள்ளி, காரப்பள்ளி, ஒன்னல்வாடி ஆகிய கிராமங்களுக்கு அருகே முகாமிட்டன. இதனால் அப்பகுதியில் இருந்த மாந்தோட்டம் நாசமானது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து, சானமாவு வனப்பகுதிக்கு, யானைகள் கூட்டத்தை விரட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X