சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கணவர் கண்ணெதிரே மனைவி பலி

Added : மே 18, 2019
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சரக்கு வாகனம் மோதிய விபத்தில், கணவர் கண்ணெதிரே மனைவி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஒசட்டியை சேர்ந்தவர் ராஜப்பா, 50. வாழை இலை வியாபாரி; இவரது மனைவி பாக்கியம்மா, 45. இவர்கள் இருவரும் நேற்று மாலை, வாழை இலையை மொபட்டில் எடுத்து கொண்டு, ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்தேவனப்பள்ளி கூட்ரோடு அருகே வரும் போது, அவ்வழியாக வந்த, பிக்கப் வாகனம் மொபட் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பாக்கியம்மா, தனது கணவரின் கண்ணெதிரே பலியானார். படுகாயம் அடைந்த ராஜப்பா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X