பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பிரசாரம்

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, புகழூர் ஹைஸ்கூல் மேடு, மோதிகாட்டூர், விஸ்வநாதபுரி, நஞ்சைக்காளக்குறிச்சி, சின்னதாராபுரம், ராஜபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதியில் நீங்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, கட்சி மாறி, கொள்கை மாறி போனதால், தற்போது தேர்தல் வந்துள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, பொங்கல் பண்டிகையின் போது, 1,000 ரூபாய் வழங்கியது. அதன் பின், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில், மக்களுக்கு, 2,000 ரூபாய் நிதி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தி.மு.க., வழக்கு போட்டு அதை தடுத்து விட்டது. தேர்தல் முடிந்த பின், நிதி வழங்கும் பணி மீண்டும் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X