பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை மாரியம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம்

Added : மே 18, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, அம்மனுக்கு ஐஸ்கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. குளித்தலை முத்து பூபாலசமுத்திரம் மாரியம்மன்கோவில் திருவிழா, கடந்த 5ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் பலவகையான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, குளித்தலை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாரியம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் நடந்த சிறப்பு பூஜையில், வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, குளித்தலை கடம்பர்கோவில் பரிசல்துறை காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பால் குடம், அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். சிலர், குழந்தையை கரும்பு தொட்டில் கட்டி எடுத்து வந்தனர். பின்பு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X