பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மே 18, 2019
Advertisement

சாலை சேதம்; பயணம் மோசம்: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., கட்டளை மேட்டு வாய்க்காலில், நச்சலூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இச்சாலை கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இவ்வழியில் தான், எல்லையம்மன்கோவில் உள்ளது. பல பகுதியில் இருந்து, இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர். அவர்கள், சாலையில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். சேதமான சாலையை சீர்செய்ய வேண்டும்.
வடிகால் உடைப்பு; மக்கள் பாதிப்பு: குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., பெருகமணி முதல், காவல்காரன்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள, இந்திரா நகர் காலனியில், கழிவுநீர் வடிகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலம் நடுவில் ஓட்டை விழுந்துள்ளதால், அவ்வழியாக செல்லும், கார் பைக் போன்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. வீடுகட்டுமான பொருட்களை வாகனத்தில் கொண்டு வரமுடியாமல், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாலத்தில் உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

கற்கள் பெயர்ந்த தடுப்புச் சுவர்: குளித்தலை அடுத்த, இனுங்கூர் கட்டளை மேட்டுவாய்க்கால் கரையில் உள்ள படித்துறை, அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த படித்துறை அருகே, கரை பாதுகாப்புக்காகவும், மண் அரிப்பை தடுக்கவும் போடப்பட்ட கற்கள் பெயர்ந்து, கரை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. பொதுப் பணித் துறையினர், வாய்க்கால் கரையின் உறுதித் தன்மையை மேம்படுத்த, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

பாலத்தில் பாதிப்பு; விவசாயிகள் தவிப்பு: குளித்தலை அடுத்த, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து, கம்மநல்லூர் மற்றும் மகாதானபுரம் அக்ராஹாரத்திற்கு செல்லும் தார்ச்சாலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, பாலம் உள்ளது. இதில், ஓட்டை விழுந்து, பால சேதமான நிலையில் இருப்பதால், அக்ரஹராத்தில் உள்ள தனியார், ஐ.டி.ஐ., தனியார் வங்கி அதிகாரிகள் அவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். நிலத்திற்கு இடுபொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

பாசன வாய்க்காலில் மண் திட்டுகள்: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி சேனியர் தெருவில் உள்ள, தென்கரை பாசன வாய்க்காலில் சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கழிவுகள், கட்டுமான பொருட்களை கொட்டுவதால், வாய்க்காலில் மண் திட்டு ஏற்பட்டுள்ளது. இதேபோல், தென்கரை பாசன வாய்க்கால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள், பாசன வாய்க்காலில் கழிவுகளை கொட்டுவதால், விவசாயத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் எடுத்து விடும்போது, தண்ணீர் விரைந்து மாசுடன் வருகிறது. மண் திட்டுகளை சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X