பொது செய்தி

தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடியும்: தம்பிதுரை ஆவேசம்

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: ''இந்த தேர்தலுடன், செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை முடியப் போகிறது,'' என, அ.தி.மு.க., கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை பேசினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த இறுதி கட்ட பிரசாரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், மூன்றாவது முறையாக, அரவக் குறிச்சிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் தேவையற்றது. செந்தில்பாலாஜியின், அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலுடன் முடியப் போகிறது. அ.தி. மு.க., மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் இயக்கம். ஆனால், தி.மு.க., கெடுக்கிற கட்சி. துரோகம் செய்து விட்டு ஓடியவருக்கு ஓட்டு போடக் கூடாது. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர, மக்கள், அ.தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


* போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: ஒருவரின் பதவி வெறி காரணமாக, வந்த தேர்தல் இது. இதில், செந்தில்பாலாஜி தோற்பார். உடனே அவர், வேறு கட்சிக்குப் போய் விடுவார். இலவச வீட்டுமனை வழங்க, ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும். துணை முதல்வராக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், அப்போது ஏன் கிராமசபை கூட்டங்களை நடத்தவில்லை. 'நீட்' தேர்வு, ஜி.எஸ்.டி., போன்ற திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., - காங்., கட்சிகள்தான். செந்தில்நாதன் வெற்றிபெற்றால், நிறைய திட்டங்கள் தொகுதிக்கு வரும். தி.மு.க., ஜெயித்தால் பூஜ்யம்தான் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X