பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் மூடப்பட்ட குடிநீர் நிலையம்: மக்கள் அவதி

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில், பல மாதங்களாக அம்மா குடிநீர் நிலையம் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டிலை வாங்க வேண்டியுள்ளது.
நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து சென்னை, ராயவேலூர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில், அம்மா குடிநீர் மையம் திறக்கப்பட்டது. இம்மையம், பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் மையத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், 10 ரூபாய்க்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது, கடைகளில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை, 20 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் வாங்கவேண்டியுள்ளது. கரூர் மாவட்டத்தில், கோடைகாலத்தையொட்டி கடந்த, 15 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில், அம்மா குடிநீர் நிலையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். அம்மா குடிநீர் விற்பனை மையத்தை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X