பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : மே 18, 2019
Advertisement

வேகத்துக்கு 'தடை' தேவை: ப.வேலூர் தாலுகா கபிலர்மலையில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள தேர்நிலை அருகே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு அசுர வேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியம்.

- வி.ரங்கராஜன், கபிலர்மலை.

தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: பள்ளிபாளையம், ஆர்.எஸ்.கார்னர் முதல், அலமேடு பாலம் வரை செல்லும் பிரதான சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் பல சாலைகளும் இணைகின்றன. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பல சமயத்தில் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்கள் சீராக செல்ல, சென்டர் மீடியன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.செல்வராஜ், பள்ளிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X