பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சிக்கன நாணய சங்க வசூல் தீவிரப்படுத்த கோரிக்கை

Added : மே 18, 2019
Advertisement

குமாரபாளையம்: கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் பெற்றவர்களிடம் வசூலை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு பணியாளர்கள் கடன் பெறும் வகையில், 'திரெப்ட் சொசைட்டி' எனும் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. கடன் பெற, இரு அரசு ஊழியர்கள் ஒருவருக்கொருவர் ஜாமின் போட்டு கடன் பெற வேண்டும். பணியாளர்கள், கடனை வசூலிக்க அக்கறை செலுத்தாததால், ஜாமின் போட்டு தொகை செலுத்தாத நபர் மெத்தனமாக இருந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் சரியான சமயத்தில் கடன் தொகையை செலுத்தினாலும், அவருக்கு ஜாமின் போட்ட நபர் பணம் செலுத்தவில்லை என்றால், சரியாக தொகை செலுத்தியவர்களுக்கு மீண்டும் கடன் வழங்க அனுமதி மறுக்கப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் சிக்கன நாணய சங்க செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''இதுபோல் புகார்கள் வந்துள்ளன. விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X