பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் ஆலங்கட்டி மழை: வெயில் தாக்கம் குறைந்ததால் மகிழ்ச்சி

Added : மே 18, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல், நல்லிபாளையம் பகுதியில், ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் நீடித்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல், வெயில் வாட்டி வதைக்கிறது. சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, புழுக்கத்தில் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஆங்காங்கே மழை பெய்வதால், வெயில் தாக்கம் சற்று குறைந்தாலும், தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலையில் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை, 3:45 மணிக்கு, நாமக்கல் நகரில், திடீரென மேகம் கருத்தது. அதையடுத்து, ஆலங்கட்டி மழை பெய்தது. பலரும், ஆலங்கட்டியை கையில் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். அரை மணி நேரம் நீடித்த இந்த மழை, 4:15 மணிக்கு ஓய்ந்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதியில் தேங்கி நின்றது. வெயில் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல், நல்லிபாளையம் பகுதியிலும், ஆலங்கட்டி மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X