பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மே 18, 2019
Advertisement

தண்ணீர் வசதியற்ற பொது கழிப்பிடம்: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியை ஒட்டி பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு அருகிலேயே தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் வறட்சியால் தண்ணீர் வருவதில்லை. இதனால், பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மூடிவிட்டனர். பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
வடிகால் பணியில் மெத்தனம்: குமாரபாளையம், ராஜ வீதி சவுண்டம்மன் கோவில் எதிரில், திருவள்ளுவர் வீதியில் வடிகால் சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. பல மாதங்களாக இதே நிலை நீடித்து வருவதால் பலரும் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைய நேரிடுகிறது. விடுமுறை என்பதால் சிறுவர்கள் பெருமளவில் இந்த பள்ளத்தில் விழுந்து அவதிக்குள்ளாகின்றனர். திருவிழா சமயத்தில் இந்த பணி முடியாததால், சுவாமி வீதி உலாவும் இந்த வீதியில் நடைபெறவில்லை. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

தடுப்புச்சுவரில் ஸ்டிக்கர் தேவை: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையத்தில் இருந்து, எலச்சிபாளையம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதில், ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச்சுவர் இருப்பது புலப்படாமல், அதன் மீது மோதி எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. ஒளிரும் விளக்கு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண் குவியலை அகற்ற வேண்டும்: பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை அடுத்த எலந்தகுட்டையில் பாலம் உள்ளது. இதன் இருபுறத்திலும் மண் குவியல் பரவலாக குவிந்துள்ளது. மழை பெய்தால், சேறும், சகதியுமாக மாறி விடுவதால், டூ வீலரில் வருவோர் சறுக்கி விழுந்து, விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, மண் குவியலை அகற்றி, பாலத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை, பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பல்லாங்குழி சாலை; விபத்து அச்சம்: குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையம் செல்லும் வீதியில் உள்ள சாலை கரடு, முரடாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிலைதடுமாறி, கீழே விழும் நிலை உள்ளது. அரசு பி.எட்., கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான லாரிகள், கார்கள், மினி லாரிகள், ஆட்டோக்கள் இந்த வழியாக வரும். பெரிய பாதிப்பு ஏற்படும் முன், புதிய சாலை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X