பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடிகள் எஸ்.பி., ஆபீசில் தஞ்சம்

Added : மே 18, 2019
Advertisement

நாமக்கல்: காதல் திருமணம் செய்து கொண்ட, இரண்டு ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். வையப்பமலையை சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாசன், 23, கார் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சித்ரா மகள் கவுரி, 21, என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், சேலம் மாரியம்மன் கோவிலில், திருமணம் செய்து கொண்டனர்.* நாமக்கல்லை அடுத்து, பொட்டணம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் கிருஷ்ணமூர்த்தி. இவர், தனியார் கல்லூரியில், பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். ராசிபுரம் ஆண்டகளூர்கேட்டை சேர்ந்த கணபதி மகள் பிரியதர்ஷினி, 20. அவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், மூன்றாமாண்டு படித்து வருகிறார். இருவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களின் காதலுக்கு, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்த, இரண்டு ஜோடிகளும், தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X