பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Added : மே 18, 2019
Advertisement

ப.வேலூர்: பரமத்தியில், பிரதான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீக் ஹவர்சில் வாகனங்கள் நகரக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ப.வேலூர் அருகே, பரமத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், டவுன் பஞ்., சார்நிலைக்கருவூலம், நீதிமன்றம், போலீஸ் ஸ்டாண்ட், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் வாகனங்கள் பரமத்தி சென்றுதான் செல்லவேண்டும். தற்போது, நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை பரமத்தி பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால், தினசரி போக்குவரத்து அதிகரித்து, அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர் இதற்கு, கடைக்காரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதே காரணம். அதிகாரிகளும் கண்டுகொள்வதே கிடையாது. மேலும், கடைகளுக்கு பொருள் வாங்க வருவோர் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்வதாலும், 'டிராபிக் ஜாம்' ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் கால விரயத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X