பொது செய்தி

தமிழ்நாடு

'பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகை பதிய ஏற்பாடுகள் தயார்'

Added : மே 18, 2019
Advertisement

தர்மபுரி: ''ஜூன் முதல், பள்ளி ஆசிரியர்களின் வருகை, பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது,'' என, கல்வி தகவல் மேலாண்மை துணை இயக்குனர் அனிதா பேசினார்.
தமிழகம் முழுவதும், பள்ளி ஆசிரியர், மாணவர்கள் விவரங்கள், ஆதார் பதிவுகள் அனைத்தும், கல்வி தகவல் மேலாண்மை இணையதளமாக, 'எமிஸ்' பதிவு செய்யப்பட்டு வருகிறது. 'எமிஸ்' பதிவுகள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என, மாவட்ட வாரியாக ஆய்வு நடந்து வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், சி.இ.ஓ., ராமசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாநில கல்வி தகவல் மேலாண்மை துணை இயக்குனர் அனிதா ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார், மெட்ரிக் உட்பட, 1,633 பள்ளிகள் உள்ளன. இதில், 11 ஆயிரத்து, 257 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், இரண்டு லட்சத்து, 78 ஆயிரத்து, 601 மாணவ, மாணவியரின் விவரங்கள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'எமிஸ்' பதிவுகள் மேற்கொள்வதில், தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம் முன்னிலையில் உள்ளது. இனி வரும் காலங்களில் மாணவர்களின் கல்வி நலத்திட்ட உதவிகள் அனைத்தும் 'எமிஸ்' பதிவுகள் அடிப்படையில் வழங்கப்படும். ஜூன் முதல், ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X