பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தேடி திரியும் யானைக்கூட்டம்: வனப்பகுதியோர மக்களுக்கு எச்சரிக்கை

Added : மே 18, 2019
Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, வனத்தில் வறட்சி நிலவுவதால், தண்ணீர் தேடி திரியும் யானைகள், ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த, ஜீரகள்ளி வனச்சரகத்தில், கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் தண்ணீர் கிடைக்காமல், யானைகள் நீர்நிலைகள் தேடி அலைகின்றன. கூட்டம் கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி, வனப்பகுதியை ஒட்டிய கிராமப்பகுதிகளில், யானைகள் சுற்றி வருகின்றன. எனவே ஜீரகள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள், எச்சரிக்கையாக இருக்கவும், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம் எனவும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X