பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அனுமதி பெறாமல் இயங்கிய முதியோர் காப்பகம்: அதிகாரிகள் அதிரடி ஆய்வு; 10 பேர் மீட்பு

Added : மே 18, 2019
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியில், அரசு அனுமதி பெறாமல் இயங்கிய முதியோர் காப்பகத்தில், 10 பேர் மீட்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம் பஞ்., பாரதிநகரில், 25 ஆண்டுகளாக, அன்பு இல்ல முதியோர் காப்பகம் இயங்கியது. ஷேக் அமானுல்லா, 75, நடத்தி வந்தார். ரயில்வே இடம், நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக புகார் எழுந்தது. கடந்த, 2017ல் காப்பகத்தில் தங்கியிருந்த தபசு என்ற பெண்ணை, சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது. இதனால் இல்லத்தை அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த, 2018, ஜன., 10ல் அன்பு இல்ல கட்டடத்தை, ஈரோடு சமூக நலத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அங்கு தங்கியிருந்த, 73 முதியோர்கள் வேறு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் பாரதிநகரில், அன்னை இல்லம் பெயரில் பெயரில், காப்பகம் தொடங்கி, 10 ஆதரவற்ற நபர்களை, ஷேக் அமானுல்லா தங்க வைத்திருப்பதாக, மாநில சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகார் போனது. மாநில சமூக நலத்துறை இணை இயக்குனர் ரேவதி தலைமையில், ஈரோடு சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை, மொடக்குறிச்சி வருவாய் அதிகாரிகள், நேற்று மதியம் ஆய்வில் ஈடுபட்டனர். ஏழு பெண்கள், மூன்று ஆண்கள் உள்பட, 10 பேர் தங்கியிருப்பது தெரிந்தது. அனைவரையும் மீட்டு, ஈரோடு கே.கே.நகரில், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும், என்.எல்.கருணை இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். உரிய அரசு அனுமதி பெற்றே, முதியோர் காப்பகம் நடத்த வேண்டும் என்று, ஷேக் அமானுல்லாவை, அதிகாரிகள் குழுவினர் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X