பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகள் இருப்பு வைக்கும் பொருட்களை தரம் மாறாமல் திருப்பி ஒப்படைக்க வேண்டுகோள்'

Added : மே 18, 2019
Advertisement

கோபிசெட்டிபாளையம்: ''கிடங்கில் இருப்புள்ள, விளை பொருட்களின், ஆய்வின் நிலையை, ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை, அமல்படுத்த ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது,'' என, மத்திய சேமிப்பு கிடங்கு ஆணைய தலைவர் பட்நாயக் பேசினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கிடங்கு காப்பாளர்களுக்கு, ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், ஐந்து நாட்கள் பயிற்சி, கடந்த, 13ல் துவங்கியது. ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 45 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது. முதன்மை விஞ்ஞானி அழகேசன் தலைமை வகித்தார்.

மத்திய சேமிப்பு கிடங்கு(மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) ஆணைய தலைவர் பட்நாயக் பேசியதாவது: தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட, கிடங்குகள் ஆணையத்தால், பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும், 200 கிடங்குகளுக்கான பதிவு, வெவ்வேறு நிலைகளில் உள்ளது. கிடங்குகள் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, ஆணையம் பல சலுகைகளை அளித்துள்ளது. விண்ணப்ப கட்டணம், பாதுகாப்பு வைப்பு மற்றும் நிகர மதிப்பு தேவை சலுகைகள் அடங்கும். விவசாயிகள் இருப்பு வைக்கும் பொருட்களின், பாதுகாவலராக இருப்பதால், சேமிப்பு காலத்துக்கு பின், எடை, தரம், அதன் குணம் மாறாமல், திருப்பித்தர வேண்டும். மூட்டைகளை அடுக்கும்போது, அதன் எண்ணிக்கையை சரிபார்த்தல், மாதிரி எடுத்தல், பிற செயல்பாடுகளுக்கு ஏதுவாக இருத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும். சேமிப்பில் இருக்கும் சரக்குகளின், மாதிரியை எடுத்து, 15 நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். பூச்சிகள் இருப்பின், உடனே பூகை மூட்டம் போட வேண்டும். இல்லையேல் நல்ல சரக்குகளையும் பூச்சிகள் தாக்கும். கிடங்கில் இருப்பு வைத்துள்ள, விளை பொருட்களை, 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும், ஆய்வின் நிலையை, ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை, அமல்படுத்த ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X