பொது செய்தி

தமிழ்நாடு

ம.நீ.ம., வேட்பாளர்கள் வெற்றிபெற்று செயல்படாவிட்டால் ராஜினாமா: கமல்ஹாசன்

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: ''மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஒழுங்காக செயல்படவில்லை என, புகார் வந்தால், அவர்களை ராஜினாமா செய்ய வைப்போம்,'' என, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, வேலாயுதம்பாளையத்தில், வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பேசியதாவது: எங்களுக்கு கொடுக்கப்பட்ட, நேரம் ரொம்ப குறைவாக உள்ளது. இருப்பினும், சட்டம் - ஒழுங்கை மீற மாட்டோம். நிகழ்ச்சி முடிந்த பிறகு, குப்பையை எடுத்துப் போட்டுவிட்டு போகும் கூட்டம் எங்களுடையது. சட்டம் - ஒழுங்கை கெடுக்கும் கூட்டம், நாடு முழுவதும் பரவி உள்ளது. அதற்காக, நாமும் பலப்பரீட்சையில் இறங்க வேண்டியதில்லை. எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று, ஒழுங்காக வேலை செய்யவில்லை என புகார் வந்தால், அவர்களை ராஜினாமா செய்ய வைப்போம். பணப் பட்டுவாடாவை ஆரம்பித்து விட்டார்கள். அதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், செவிடராக, குருடராக உள்ளனர். தலைவர்களாக நீங்கள் மாறவேண்டும். நாங்கள் சேவகர்களாக இருப்போம். அப்போது தான் தமிழகம் முன்னேறும். நாட்டுக்கே வழிகாட்டியாக அமையும். பணத்தை வைத்து, ஓட்டுகளை வாங்கி விடலாம் என நினைக்கும் அற்பர்களை அகற்ற வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X