பொது செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி அரசு தானாகவே கவிழும்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆருடம்

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: ''முதல்வர் பழனிசாமி அரசை யாரும் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. 23க்கு பிறகு, அது தானாகவே கலையும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தடாகோவிலில், நேற்று காலை, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த மாதம், 18ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஓட்டுப் போட்டீர்கள். அதேபோல், தமிழகத்தில் எடுபிடி அரசாக உள்ள, பழனிசாமி அரசையும் அகற்ற, ஓட்டுப் போட வேண்டும். 'எனது அரசை கவிழ்க்க, ஸ்டாலின் முயற்சி செய்கிறார்' என, முதல்வர் பழனிசாமி, பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். அவர் ஆட்சியை யாரும் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. வரும், 23க்குப் பிறகு பழனிசாமி அரசு தானாகவே கவிழும். அதன்பின், தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது, தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். அரவக்குறிச்சி தொகுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X