பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணி, நெடுஞ்சாலை துறையை கமிஷனுக்காக வைத்துள்ளார் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : மே 18, 2019
Advertisement

கரூர்: ''கமிஷன் கிடைக்கும் என்பதால், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளை, முதல்வர் பழனிசாமி தன் வசம் வைத்துள்ளார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே, நேற்று மாலை நடந்த, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த, 2016ல், செந்தில்பாலாஜியை வெற்றி பெற வைத்தீர்கள். இவர், எம்.எல்.ஏ.,வாக இருந்தால், அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து என, 18 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்தனர். அவர்களுக்கு பாடம் புகட்ட, செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்வர்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கவனிக்க, போலீஸ் துறையை தங்களிடம் வைத்துக் கொள்வார்கள். ஆனால், முதல்வர் பழனிசாமி, போலீஸ்துறையுடன், பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகளையும் தன் வசம் வைத்துள்ளார். காரணம், அதில்தான் சில்லரை கிடைக்கும். கொள்ளை அடிக்க முடியும். அதைப் பயன்படுத்தி டெண்டர் மூலம் கமிஷன் வாங்கலாம். அதனால்தான், முதல்வர் பழனிசாமி அந்த பதவியில் இருக்க கூடாது என, 18 எம்.எல்.ஏ., க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க, ஓட்டுப் போட்டீர்கள். அதேபோல், பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க, தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடுங்கள். நான் முதல்வர் பதவி கனவு காணவில்லை. வரும், 23க்குப் பின், அது நிஜமாகவே நடக்கப் போகிறது. பழனிசாமி ஆட்சி மைனாரிட்டி ஆட்சி. பிரதமர் மோடி, அ.தி.மு.க., ஆட்சிக்கு முட்டு கொடுத்துள்ளார். தி.மு.க., கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது. 22 சட்டசபை தொகுதிகளிலும், வெற்றி பெற்று, மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X