சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈச்சர்வேன் - கார் மோதி 6 பேர் பலி

Added : மே 18, 2019
Advertisement

கிருஷ்ணராயபுரம்: பொய்கைப்புத்தூர் அருகே, ஈச்சர் வேன் மீது, கார் மோதியதில், ஆறு பேர் பலியாகினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 37, இவர் மனைவி அருணா, 28. இவர்களுக்கு ஜோஸ்வந்ந், 1, மற்றும் ஒன்றரை மாத குழந்தை இருந்தது. கீழ மாயனூரில் உள்ள அருணாவின் அப்பா கிருஷ்ணமூர்த்தி, 70, வீட்டில், நேற்று முன்தினம் நடந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அனைவரும் சென்றிருந்தனர். நேற்று, மகன்களுடன் தம்பதியர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்களான கிஷோர், 15, கோமதி, 25, நவீன், 24, ஆகிய, எட்டு பேர், மாருதி ஸ்விப்ட் காரில், திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள ஈச்சங்கோட்டை கோவிலுக்கு சென்றனர். சிவக்குமார் காரை ஓட்டிச் சென்றார். காலை, 10:40 மணிக்கு, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், பொய்கைப்புத்தூர் அருகே, முன்னால் சென்ற லாரியை, கார் முந்திச் செல்ல முயன்றது. அப்போது, தோகைமலை அடுத்த மேலவெளியூரை சேர்ந்த முருகேசன், 27, சென்னையில் இருந்து, தையல் மிஷின்கள் ஏற்றிக்கொண்டு, கரூருக்கு ஓட்டி வந்த ஈச்சர் வேன் மீது, கார் மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற அனைவரும், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நவீன், அருணா, ஜோஸ்வந்த் மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். கோமதி, சிவக்குமார் இருவரும், கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X