பொது செய்தி

தமிழ்நாடு

900 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம்: தண்ணீர் பற்றாக்குறை சமாளிக்கப்படுமா?

Added : மே 18, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி, கெலமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், 900 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்ற நிலையில், பருவமழை, கை கொடுக்கா விட்டால், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பெரும் திண்டாட்டம் ஏற்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியில், 475 பேர்வெல் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இதில் சில, நீரின்றி வறண்டு விட்டன. அதேபோல், ஓசூர் ஒன்றியம் சார்பில், பஞ்., பகுதிகளில் உள்ள, 375ல், 208 போர்வெல்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. கெலமங்கலம் டவுன் பஞ்.,ல், 65 போர்வெல்லில், 12 செயல்பாட்டில் இல்லை. தேன்கனிக்கோட்டை டவுனில், 62 போர்வெல்களும், தளி ஒன்றியத்தில், 1,486 போர்வெல்களில், 1,383 போர்வெல்கள் மட்டுமே செயல்பட்டில் உள்ளன. சூளகிரி ஒன்றியத்தில், 143 போர்வெல்களில் தண்ணீர் இல்லை. செயல்பாட்டில் உள்ள போர்வெல்களில், 900 அடிக்கு கீழ், நீர்மட்டம் உள்ளது. தனிநபர்கள் வீடுகளில் உள்ள போர்வெல்களிலும் இது தான் நிலை. ஒகேனக்கல் குடிநீரும், 100 சதவீதம் வினியோகம் இல்லை. கடந்த ஏப்., முதல், மே, 16 வரை மட்டும், ஓசூர் பகுதியில், 176.8, தளியில், 110, தேன்கனிக்கோட்டையில், 53.6, சூளகிரியில், 141, அஞ்செட்டியில், 13.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இருந்தாலும், குளம், குட்டை, ஏரி, கண்மாய் போன்ற நீர்நிலைகள் நிறையும் அளவுக்கு மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரியும் நிலை உள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் மழை இல்லாவிட்டால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தென்மேற்கு பருவ மழைக்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X