பொது செய்தி

தமிழ்நாடு

ஏக்கருக்கு 10 டன் முலாம்பழம் அறுவடை: ரூ.40 ஆயிரம் லாபமீட்டும் விவசாய சகோதரர்கள்

Added : மே 18, 2019
Advertisement

நாமக்கல்: கோடைகாலத்தில், மக்கள் அதிகம் விரும்பும் முலாம் பழத்தை சாகுபடி செய்ததன் மூலம், ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டி, விவசாய சகோதரர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து, மக்கள் தங்களை காத்துக் கொள்ள, நுங்கு, கம்பங்கூழ், வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழம், குளிர்பானம் போன்றவற்றை, மக்கள் அதிகளவில் உட்கொள்கின்றனர். முலாம் பழம் விலை குறைவாகவும், தரமானதாவும் இருப்பதால், நன்கு விற்பனையாகிறது. அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளும், கணிசமான லாபத்தை ஈட்டி வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் சகோதரர்கள் கவுரிசங்கர், புவனேஸ்வரன், முலாம் பழம் சாகுபடியில், அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். ஏக்கருக்கு, 40 ஆயிரம் வீதம், 10 ஏக்கரில், நான்கு லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அதிக செலவும் இல்லாத, குறைவான தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய முலாம் பழம் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து, செடிகளை வாங்கி வந்து நடவு செய்தோம். பல்வேறு ரகங்கள் இருந்தாலும், 'கோல்டன் கவுரி' என்ற ரகத்தை, சாகுபடி செய்துள்ளோம். முறையாக பராமரித்து வந்ததையடுத்து, 45 நாட்களில் இருந்து அறுவடை துவங்கியது. நன்கு பழுத்த பழங்கள் தானாகவே, காம்பில் இருந்து விடுவித்துக் கொண்டு விழுந்துவிடும். அவற்றை, கிலோ, 30, 25, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மொத்தமாக, கிலோ, 14 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். ஏக்கருக்கு, 9 முதல், 10 டன் வரை அறுவடை செய்யலாம். சீசனை பொறுத்து, அதன் விலையும் அதிகரித்து, நல்ல லாபத்தை கொடுக்கும். சாகுபடி செய்த, 10 ஏக்கரில், 80 டன் வரை அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், 14 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளோம். செலவு போக, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. தற்போது, செடிகள் பிடுங்கப்பட்டுள்ளன. மீண்டும் செடிகளை வாங்கி நடவு செய்ய உள்ளோம். ஓராண்டுக்கு, ஐந்து முறை, இதுபோல் நடவு செய்து, பழங்களை அறுவடை செய்யலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X