பொது செய்தி

தமிழ்நாடு

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வரும் 30க்கு ஒத்திவைப்பு

Added : மே 18, 2019
Advertisement

நாமக்கல்: யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, வரும், 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 23, கொலை வழக்கு தொடர்பாக, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு, 2018, டிச., 19ல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், யுவராஜை, போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக, யுவராஜ் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண், 1ல், நேற்று விசாரணைக்கு வந்தது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையை, வரும், 30க்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் வடிவேல் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X