பொது செய்தி

தமிழ்நாடு

உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடம்: ஒப்படைக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு

Added : மே 18, 2019
Advertisement

சேலம்: உதவி பெறும் அரசு பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில், உதவி பெறும் பள்ளிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி, பள்ளி கட்டமைப்பு, நிர்வாகம் உள்ளிட்டவை, தனியாரிடம் இருந்தபோதும், அங்கு பணிபுரியும், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, சம்பளத்தை அரசு வழங்குகிறது. சில ஆண்டாக, தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால், உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், உபரியாக தொடங்கின. அந்த ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்ற, பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால், பள்ளிகளில் பணியிடங்கள் காலியாகும்போது, அவற்றை உபரியாக கருதி, திரும்ப ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோல், 2013 - 14ல், உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து, 7,270 ஆசிரியர் பணியிடங்கள், திரும்ப அரசுக்கு ஒப்படைக்கப்பட்டன. தற்போது, 2014 முதல், 2018 வரையான காலகட்டத்தில், ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால், காலியாகும் பணியிடங்கள், உபரியாக இருக்கும்பட்சத்தில், அவற்றை திரும்ப ஒப்படைக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மே, 31க்குள், இப்பணிகளை முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X