பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும்: லேனா தமிழ்வாணன்

Added : மே 18, 2019
Advertisement

சேலம்: ''நாட்டில், முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும்,'' என, லேனா தமிழ்வாணன் பேசினார்.
நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின், 'நம்பிக்கை இல்லம்' எனும், மாற்றுத்திறனாளர் மறுவாழ்வு பயிற்சி மையம் மற்றும் இலவச மாலை நேர படிப்பு மையத்திறப்பு விழா, சேலம், கன்னங்குறிச்சியில், நேற்று நடந்தது. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், இல்லத்தை திறந்துவைத்து பேசியதாவது: கவிஞர் ஏகலைவன், தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளிடமுள்ள படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு, சாதித்து வருகிறார். அவர்களிடம் உள்ள திறமைகளை, உலகுக்கு அடையாளம் காட்ட, நம்பிக்கையை விதைக்கிறார். வாழ்வியல் தேவைகளை, தாங்களே செய்து கொள்ள, அவர்கள் வாழ்வில் சாதித்து வெற்றி பெற, பயிற்சியளிக்க, நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவப்பட்டது. இதன் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி, ஏழை குழந்தைகளுக்கு இலவச படிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும். அவர்களை, அவரவர் பிள்ளைகள், இல்லங்களிலேயே வைத்து பேணிக்காக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய நம்பிக்கை இல்லங்கள், நாடெங்கும் பெருக வேண்டும். இது, சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை. நம்மால் முடிந்த உதவிகளை, இதுபோன்ற நம்பிக்கை இல்லங்களுக்கு செய்து, சமூகம் மேம்பட, நாமும் பங்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் ஏகலைவன், கவிஞர் கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X