சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் முடிந்து சென்றபோது விபத்து: உயிர்தப்பிய புதுமண தம்பதி

Added : மே 18, 2019
Advertisement

ஆத்தூர்: திருமணம் முடிந்து, மணமகளின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, கார் கவிழ்ந்ததில், புதுமண தம்பதி உள்பட நான்கு பேர் உயிர் தப்பினர்.
தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த, டாக்டர் முனிரத்னம், 31. சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூரைச் சேர்ந்தவர் ஜீவிதா, 23. இருவருக்கும், வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், நேற்று, திருமணம் நடந்தது. அயோத்தியாப்பட்டணத்தில் வரவேற்பு விழா முடிந்து, மதியம், 2:30 மணிக்கு, ஆத்தூர் வழியாக, சிறுவாச்சூருக்கு, 'நிஷான்' காரில், புதுமண தம்பதியர் சென்றுகொண்டிருந்தனர். அம்மம்பாளையம், காந்திபுரம் பஸ் ஸ்டாப் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த முனிரத்னம், ஜீவிதா, அவரது உறவினர் லட்சுமி, 40, டிரைவர் தங்கராஜ், 50, ஆகியோர் உயிர்தப்பினர். லேசமான காயமடைந்ததால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்தூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X