சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்கமாற்றாங்கய்யா! விவசாயிடம் ரூ.2380 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

Added : மே 18, 2019
Advertisement

வாலாஜாபேட்டை: விவசாயியிடம், 2,380 ரூபாய் லஞ்சம் பெற்ற, மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 26. விவசாயி. இவர், தனது வீட்டுக்கு மும்முனை இணைப்பு மற்றும், மின் மீட்டரை இடமாற்றம் செய்ய, வாலாஜாபேட்டை நகர மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனுவை, மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணன், 48, பரிசீலனை செய்தார். பின், அலுவலக கட்டணமாக, 7,220 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை வாங்கிக்கொண்டு தன்னிடம் காண்பித்து, தனக்கு, 2,380 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான், மின் இணைப்பு கொடுக்க, அனுமதி கடிதம் கொடுக்க முடியும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, இது குறித்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார், ரசாயன பவுடர் தடவிய, 2,380 ரூபாயை பாலாஜியிடம், நேற்று காலை, கொடுத்தனுப்பினர். அதை அவர், வாலாஜாபேட்டை நகர மின்வாரிய அலுவலகம் சென்று, அங்கிருந்த சரவணனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X