சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் கைது

Added : மே 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

வேலூர்: வேலூர் அருகே, காதல் கணவர், குழந்தையை கொலை செய்து புதைத்த மனைவி கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த, தாஜ்புரா மந்தை வெளியை சேர்ந்தவர் ராஜா, 25;எலக்ட்ரீஷியன். இவரது மனைவி தீபிகா, 20. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள், காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன், பிரனீஷ்,1. கணவர், குழந்தையை கடந்த, 13 முதல் காணவில்லை என, ஆற்காடு தாலுகா போலீசில், தீபிகா நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், தீபிகா முன்னுக்கு பின், முரணாக பதிலளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணையில், கணவர், குழந்தையை கொலை செய்து வீடு அருகே புதைத்து விட்டதாக, தீபிகா கூறியுள்ளார். நேற்று பகல், 12:30 மணிக்கு தீபிகாவுடன், அவர் சொன்ன இடத்துக்கு போலீசார் சென்றனர். டி.எஸ்.பி., கலைச்செல்வன், தாசில்தார் வச்சலா முன்னிலையில், அந்த இடத்தை தோண்டி, இரண்டு உடல்களை வெளியே எடுத்தனர்.
தீபிகா வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ராஜா குடிபோதையில் தினமும் தீபிகாவை அடித்து உதைத்து வந்துள்ளார். கடந்த, 4ல் குடிபோதையில் வந்த ராஜா, தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த தீபிகா, கல்லால் தாக்கியதில், ராஜா இறந்தார். தான் ஜெயிலுக்கு போய் விடுவோம், குழந்தை அனாதையாகி விடும் என பயந்து, துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் வீடு அருகே உள்ள நிலத்தில், இருவரது உடல்களை புதைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். தீபிகாவுக்கும், ஆற்காட்டை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. தீபிகா மட்டும் இருவரையும் கொன்று புதைத்திருக்க முடியாது. சந்தேகத்தின்படி, தீபிகாவின் குடும்பத்தினர், அவரது கள்ளக்காதலன் என, 10 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
18-மே-201913:48:02 IST Report Abuse
Thanu Srinivasan தீபிகா என்ற அந்த கொலைகாரி சொல்லுவது உண்மையாக இருக்க முடியாது. குழந்தை அனாதையாகி விடும் என்று உண்மையிலேயே கவலை பட்டிருந்தால், அவர் குழந்தையை கொன்று விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டிருப்பார். கணவர் மற்றும் குழந்தையின் உடல்களை புதைத்து விட்டு கூலாக புகார் கொடுத்து இருக்க மாட்டார். மாறாக இவருக்கு வேறு நபருடன் உறவு இருந்திருக்கும். கணவனை மட்டும் கொன்று விட்டபின்பும் குழந்தை ஒரு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் இருவரையும் கொன்றுள்ளாள். கல்லால் அடித்ததில் கணவன் இறந்திருந்தால், ப்ரேத பரிசோதனையில் தெரியவரும். உண்மை விரைவில் தெரியவரும். எஸ். ட்டி. ஸ்ரீநிவாசன் சென்னை ௭௩ 9445694259
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X