டைம் இதழுக்கு மோடி பதில்

Updated : மே 18, 2019 | Added : மே 18, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வாசகத்துடன் அட்டை படம் வெளியிட்ட டைம் பத்திரிகைக்கு மோடி பதில் அளித்துள்ளார்.






சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வாசகத்துடன் டைம் பத்திரிகை அட்டை படமும், அது பற்றி கட்டுரையும் வெளியிட்டிருந்தது. இதற்கு பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே டைம் பத்திரிகையில், 'இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் மிகப் பெரிய நம்பிக்கை மோடி ' என்று மற்றொரு கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தது. காங்., குறித்து குறிப்பிடுகையில், ' வாரிசு கொள்கையை விட மற்றவற்றையும் செய்யலாம்' எனவும், காங்., தலைவர் ராகுல் குறித்து குறிப்பிடுகையில், ' கற்று தந்தாலும் புரிந்து கொள்ள முடியாதவர்' என்றும் விமர்சித்திருந்தது டைம் பத்திரிகை.





மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து நேற்று (மே 17) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள மோடி, டைம் பத்திரிகை ஒரு வெளிநாட்டு பத்திரிகை. அதில் கட்டுரை எழுதியவரும் தான் பாக்.,ஐ சேர்ந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறி உள்ளார். அதன் நம்பகத்தன்மைக்கு இது ஒன்றே போதும் என பதிலளித்தார்.





டைம் பத்திரிகை தற்போது மட்டுமல்ல 2015 லும் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு அப்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தன. பிரதமர் மோடியின் நற்பெயரையும், செல்வாக்கையும் கெடுப்பதற்காக இது போன்ற கட்டுரை வெளியிட்டுள்ளதாக பா.ஜ., கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
09-ஜூன்-201906:50:29 IST Report Abuse
natarajan s வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாம் வடிகனுக்கு கட்டுப்பட்டவை . அவைகள் இத்தாலியினரை பற்றி எழுதவேண்டுமானால் போப்பரசரிடம் அனுமதி பெறவேண்டும் என்று எழுதப்படாத விதி உள்ளது அதனால் காங்கிரஸ் குடும்பத்தை பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-மே-201902:11:05 IST Report Abuse
meenakshisundaram இந்த பதிலை ஒவ்வொரு இந்தியா குடிமகனும் படிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
19-மே-201913:57:01 IST Report Abuse
அம்பி ஐயர் இந்தியாவை டிவைட் (பிரிவினை) செய்தது யார் என்பது ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயம்....அது டைம் மெகசினுக்கு மட்டும் தெரியாதது வியப்பு தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X